அடுத்த அரஸ்ட் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன். அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் அவர் பேசும் ஒவ்வொரு விஷயமும் வைரலாக மாறி வருகிறது. பா.ஜ.க வெற்றிபெற்றால் மோடிக்குப் பதிலாக அமித் ஷா பிரதமர் ஆக்கப்படுவார் என்றும் தேர்தலுக்குப் பிறகு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்றும் கூறியிருக்கிறார்.

அதாவது பா.ஜ.க.வில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக்கிய அரசு பதவி வகிக்கக் கூடாது என்ற நடைமுறையை சுட்டிக்காட்டி மோடிக்குப் பதிலாக அமித் ஷா வருவார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். பா.ஜ.க வின் மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா ஆகியோர் இதற்கு பதில் அளித்தனர். பா.ஜ.க வில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக்கிய அரசு பதவி வகிக்கக் கூடாது என்ற விதி கிடையாது என்று அவர்கள் கோரஸாக சொன்னார்கள். ஆனால், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பழைய பெரும் தலைகள் 75 வயது விதியைக் காட்டித்தான் ஓரம் கட்டப்பட்டனர் என்ற உண்மையை இவர்கள் மறைத்துப் பேசினார்கள்.

அதே வேளையில், இவர்கள் யாருமே யோகி ஆதித்யநாத் தூக்கி வீசப்படுவார் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தை மறுத்துப் பேசவில்லை. அதன் மூலமாக மோடியா? யோகியா? என்ற பெரும் உள்கட்சி சண்டையை பா.ஜ.க.வுக்குள் தூண்டி விட்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். கடைசி கட்டத்தில் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தடாலடி ஆட்டம் ஆடிவருகிறார்.