நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்களை திணற வைத்த இந்திய பவுலர்கள்! ரன் குவிக்க முடியாமல் திணறல்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி ஆட்டம் செல்ல செல்ல இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் குப்டில் அதிகபட்சமாக 33 ரன்களை அதிரடியாக எடுத்தார். 

மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணியினர் திணறினர்.133 ரன்கள் எடுத்தால் என்ற எளிதான இலக்கை இந்திய அணி சேசிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.