முரசொலி நாளிதழ் வைத்திருந்தால் தமிழன், மனிதன் என்று பொருள்! ரஜினியின் கருத்துக்கு முரசொலியில் பதிலடி!

முரசொலி நாளிதழ் வைத்திருந்தால் தமிழன், மனிதன் என்று பொருள் என முரசொலி இதழில் நடிகர் ரஜினிகாந்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார். அப்போது பேசிய அவர் பத்திரிகையாளர்களை பற்றியும் பல கருத்துக்களை கூறினார் . 

இன்றைய காலகட்ட பத்திரிகை முன்புபோல் இல்லை என்றும் சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் நம் நாட்டிற்கு தேவை எனவும் அவர் கூறினார் . மேலும் பேசியவர் முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் கூறிய இந்த கருத்தானது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது . மேலும் இதற்கு எதிராக திமுகவினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் சர்ச்சைக்குரிய கருத்திருக்கு பதிலளிக்கும் விதமாக முரசொலி பத்திரிகையின் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. முரசொலி இதழில் வைத்திருப்பவன் தமிழன் மனிதன் என்ற நாளிதழில் கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் முரசொலி நாளிதழ் வைத்திருப்பவன் சாதி மத பேதம் பார்க்காதவன், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பவன் , இந்தி திணிப்பை ஏற்காதவன், ஆணும் பெண்ணும் சமம் என்று நினைப்பவன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியின் கருத்தை விமர்சித்து இத்தகைய கருத்து நாளிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது.