கல்யாணம் ஆன ஐந்தே மாதத்தில் ஊர்வசிக்கு நேர்ந்த விபரீதம்! 2வது மனைவியாக்கப்பட்டதால் சோக முடிவு!

திருமணமான 5 மாதங்களிலேயே பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அருப்புக்கோட்டை என்னும் பகுதி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதனருகே உள்ள நரிக்குடி என்னும் பகுதியில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் முத்துமுருகன். இவர் எஸ்.வள்ளகுளம் என்னும் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சில ஆண்டுகள் முன்னர் திருமணமாகிவிட்டது. மனைவியுடன் ஏற்பட்ட வந்தால் மனக்கசப்புகள் அதிகமானதால் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று கொண்டனர். கந்தனின் உறவினரான ராமு என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். ராமுவுக்கு ஊர்வசி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் முத்துமுருகனின் வீட்டார் ஊர்வசியை தங்கள் மருமகளாக்கி கொள்ள எண்ணினர். இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்த பிறகு முத்துமுருகனுக்கும் ஊர்வசிக்கும் 5 மாதங்கள் முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணமான முதல் வாரத்திலிருந்தே கணவன் மனைவியிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. சிலமுறை வாக்குவாதங்கள் முற்றி கைகலப்பு வரை சென்றுள்ளது. சமீபத்தில் தேவையில்லாத காரணத்திற்காக தன்னை கணவர் அடித்து பின்பு படுத்துகிறார் என்று ஊர்வசியை அக்கம்பக்கத்தினரிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் முத்துமுருகன் வேலைக்கு சென்ற பின்னர், ஊர்வசி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நெருப்பின் வெப்பம் தாங்காது ஊர்வசியை கூக்குரலிட்டதை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் எவ்வளவோ முயன்றும் தீயை அணைக்க இயலவில்லை. வேகமாக தீ பரவியதால் சம்பவ இடத்திலேயே ஊர்வசி கருகி உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவத்தை அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஊர்வசியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சூழி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமாகி 5 மாதங்களேயான காரணத்தினால் வழக்கை வருவாய் கோட்டாட்சியரிடம் மாற்றியுள்ளனர்.

இந்த சம்பவமானது அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.