தீபாவளியை கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளை மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தல தீபாவளி உற்சாகம்..! பைக்கில் அதிவேகம்..! இளம் மனைவி கண் முன்னே துடிதுடித்து பலியான புது மாப்பிள்ளை! கோவை சோகம்!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவிந்தம்பாளையம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆறுமுகத்தின் வயது 28. இவருக்கு 10 மாதங்கள் முன்னர் கிருபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கிருபாவின் வயது 20. இந்நிலையில் தன்னுடைய மாமியார் வீட்டில் தீபாவளியை கொண்டாடுவதற்காக ஆறுமுகம் கிருபாவை இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள காட்டுப்புத்தூர் ஊருக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
இருவரும் கரூர் மாவட்டம் தென்னிலைக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது, பல்லடத்தில் இருந்து கரூருக்கு வேகமாக வந்துகொண்டிருந்த கார் தன் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் ஆறுமுகம் தூக்கி வீசப்பட்டார். சாலையில் விழுந்த அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிருபாவுக்கும் காயங்கள் மிகவும் அதிகமாக ஏற்பட்டிருந்தது.
மேலும் காரில் பயணித்து வந்த மனோஜ்குமார்(24), பொன்விக்னேஷ்(20), செல்வக்குமார்(24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து ஏற்பட்டவுடன் அக்கம்பக்கத்தினர் உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரின் உடலை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுபாவை மட்டும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றினர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது கோவிந்தம்பாளையம் கிராமத்தில் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.