திருமணமான இரண்டே மாதத்தில் கொரோனாவுக்கு கணவன் பலி! உடலை கூட பார்க்க முடியாமல் தவித்த இளம் மனைவி!

திருமணமாகி மூன்று மாதங்கள் ஆன நிலையில் இந்தியாவை சேர்ந்த புது மாப்பிள்ளை சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் என்ற பகுதிக்கு அருகே பானூர் என்ற இடத்தில் வசித்து வருபவர் மம்மு. 28 வயதாகும் இவரது மகன் ஷப்னாஸ் சவுதி அரேபியாவில் உள்ள மெதினாவில் பணிபுரிந்து வருகிறார். தனது திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்த ஷப்னாஸுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஷாஹானாஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 

பின்னர் பணியில் மீண்டும் சேர்வதற்காக கடந்த மார்ச் மாதம் மூன்றாம் தேதி புது மாப்பிள்ளை ஷப்னாஸ் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சவுதி அரேபியாவில் ஷப்னாஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷப்னாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தன்னுடைய கணவன் இறந்தது பற்றிய தகவல் அறிந்த மனைவி ஷாஹானாஸ் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். வேறு வழியில்லாமல் ஷப்னாஸின் உடல் சவுதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டது. தனது கணவனின் உடலைக் கூட பார்க்க முடியாத அவரது மனைவி கதறி அழுத சம்பவம் மனதை நெகிழ வைத்துள்ளது.