திருமணமான நாள் முதல் சந்தேகம்..! நான்கே மாதத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு..! மாயமான கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்! எர்ணாவூர் பரபரப்பு!

திருமணமான‌ 4 மாதங்களிலேயே பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஸ்வரி என்ற மகள் இருந்தாள். தேவி தன்னுடைய உறவினரின் மகனான அன்பு என்ற 27 வயது இளைஞருடன் லோகேஸ்வரிக்கு திருமணம் நடத்தினார்.

திருமணம் நடந்தவுடன் அன்பு தன்னுடைய மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். வரதட்சனை கொடுக்க இயலாததால் சந்தேகம் என்ற பெயரில் அன்பு லோகேஸ்வரியை கடுமையாக மனதளவில் சித்திரவதை செய்துள்ளார்.

இந்நிலையில் லோகேஸ்வரி மாத தொடக்கத்தில் தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். 15-ஆம் தேதியன்று லோகேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற  அன்பு தகராறு செய்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகள் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பதை கண்ட பெற்றோர் கதறி அழுதனர்.

உடனடியாக கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமையாலும், கணவனின் சந்தேகத்தினாலும் தான் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியிருந்த அன்பை தேடி வந்தனர்.

இந்நிலையில் அன்பு ஆந்திரா மாநிலத்தில் தடாவில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தது. உடனடியாக காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். காவல்துறையினர் வருவதை அறிந்து கொண்ட அன்பு விசாரணைக்கு பயந்து தூக்கில் தொங்கியுள்ளார்.

காவல்துறையினர் அன்பின் தற்கொலை குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கும்மிடிபூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.