வரதட்சனை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது ஹைதராபாத் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீ ரொம்ப அழகா இருக்க..! சோ நீ ஏற்கனவே..! கணவனுக்கு வந்த விபரீத எண்ணம்! இளம் மனைவி எடுத்த பகீர் முடிவு!

ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் விஜயேந்தர். இவர் 5 மாதங்களுக்கு முன்னர் சுஷ்மிதா என்ற 19 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சுஷ்மிதா நல்ல தோற்றத்துடன் மிகவும் அழகாக காணப்படுவார்.
இதனால் விஜயேந்திரருக்கு சுஷ்மிதா மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன. நிச்சயமாக திருமணத்திற்கு முன்னர் சுஷ்மிதா வேறு எவருடனும் தொடர்பில் இருந்திருப்பார் என்று விஜயேந்தர் நம்பியுள்ளார். இதுகுறித்து சுஷ்மிதாவிடம் நிறைய முறை கேட்டு வற்புறுத்தியுள்ளார். அப்போது அந்த நபரின் செல்போன் எண்ணை கொடு என்றும் சுஷ்மிதாவை கணவர் மிரட்டியுள்ளார்.
இதுமட்டுமின்றி சுஷ்மிதாவின் மாமியார், வரதட்சணை கொடுமையில் ஈடுபட்டார். திருமணமான புதிதில் 3 லட்சம் ரொக்கம், 150 சதுர கெஜம் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்கள், தங்க நகைகள் ஆகியவற்றை சுஷ்மிதாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்திருந்தனர். இருப்பினும் மாமியார் மேலும் மேலும் வரதட்சனை எதிர்பார்த்து சுஷ்மிதாவை கொடுமைப்படுத்தினார்.
கணவரின் சந்தேக புத்தியினாலும், மாமியாரின் வரதட்சனை கொடுமையினாலும் சுஷ்மிதா வாழ்க்கையின் மீது வெறுப்புற்றார். இந்நிலையில் திடீரென்று சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சுஷ்மிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.