திருமணமாகி இரண்டே மாதம்..! மாமியார் வீட்டுக்கு டூ வீலரில் புறப்பட்ட கணவன் - மனைவி..! ஆனால் ஆற்றில் சடலங்களாக மிதந்த பயங்கரம்!

திருமணமான 2 மாதங்களில் மனைவியின் தாய் வீட்டிற்கு சென்ற தம்பதியினர் இறந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவில் ஹாசான் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கிருத்திகா என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவருக்கு இரு மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த அர்தேஷ் என்று இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. இருவரும்  மென்பொறியாளர்கள் என்பதால் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தனர். 

இதனிடையே கொரோனா வைரஸ்காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இருவரும் பெங்களூருவில் இருந்து தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கிருத்திகாவின் தாய் வீட்டிற்கு இருவரும் புறப்பட்டுள்ளனர். ஆனால் கிருத்திகாவின் தாய்வீட்டை இருவரும் சென்றடையவில்லை.

இதனால் இரு வீட்டாரும் பெரிதளவில் பதறிப்போயினர். சில மணிநேரம் கழித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அர்தேஷின் இருசக்கர வாகனத்தை ஹேமாவதி ஆற்றங்கரை அருகே கண்டுபிடித்தனர். 

பின்னர் ஆற்றங்கரை பகுதியில் நன்றாக தேடியபோது இருவருடைய உடல்களும் கரை ஒதுங்கின. உடனடியாக காவல்துறையினர் இரு வீட்டார் இடமும் தகவல் தெரிவித்தனர். கணவன்-மனைவி மற்றும் இருவீட்டார் இடையே எந்தவித தகராறும் இல்லாத காரணத்தினால் நிச்சயமாக இது தற்கொலையாக இருக்காது என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர்.

மேலும் அணையில் நின்றுகொண்டு செல்பி எடுக்க முயற்சி செய்தபோது நிலை தடுமாறி விழுந்து உயிர் இழந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.