கடந்த சில வாரங்களாக பிரிட்டன் நாட்டில் கொரோனாவால் அனுமதிக்கப்படும் சிறுவர்களிடம் புதிய வகை அறிகுறிகள் காணப்படுவதாக அந்நாட்டு மருத்துவ ஆய்வுகள் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது.
நாக்கில் சின்ன சின்ன வீக்கம்..! கைகளில் ரத்தக்கட்டு..! சிறுவர்களுக்கு புதுவித கொரோனா அறிகுறி..! அதிர்ச்சியில் டாக்டர்கள்!

பிரிட்டன் நாட்டில் கொரோனா தாக்குதல் கடந்த சில வாரங்களாக அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டுட்டு மருத்துவ ஆய்வகம், ஒரு பயங்கரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது அந்நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு புதிதாக அறிகுறிகள் தென்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதாவது தசை வீக்கம், தொடர் காய்ச்சல், கைகளில் தட்டை போன்ற குறிகள் ஆகிய அறிகுறிகளுடன் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இத்தகைய அறிகுறிகள் கொரோனா வைரஸ் நோய்க்கு மட்டுமின்றி "டாக்சிக் ஷாக் சின்ட்ரோம்" மற்றும் "கவாசகி" ஆகிய நோய்களுடனும் தொடர்புடையனவாக உள்ளன.
மேலும் இத்தகைய அறிகுறிகளுடன் வரும் குழந்தைகளில் சிலருக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரிசோதனை செய்து பார்த்ததில் வைரஸ் தாக்குதல் இல்லை என்று தெரிய வந்துள்ளதால் மருத்துவர்கள் பெரிதளவில் குழப்பமடைந்துள்ளனர்.இத்தகைய சூழலானது பிரிட்டன் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.