சாலையில் அதிவேகமா? கண்டுபிடிக்க வந்துவிட்டது புதிய கருவி! யாரும் ஓடவும் முடியாது! ஒழியவும் முடியாது!

புதுச்சேரியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக அதிநவீன‌ கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு நாள்தோறும் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. நெடுஞ்சாலையின் வழியாக செல்வதால் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் நிறைய விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக புதுச்சேரியிலிருந்து கடலூர் விழுப்புரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகருக்குள் 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்ட எல்லையைக் கடந்த பிறகு 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்ற விதியை பெரும்பாலானோர் பின்பற்றாமல் இருப்பதாலேயே இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக புதுச்சேரி போக்குவரத்து காவல் துறையினர் வேகத்தை அறியும் அதிநவீன கருவியை உபயோகித்து வருகின்றனர். ஒவ்வொரு வாகனத்தின் வேகத்தையும் மருந்து வேகக்கட்டுப்பாட்டை மீறி செல்லும் வாகனங்களுக்கு தகுந்த அபராதம் விதிக்குமாறு அந்த கருவியில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் சென்ற மாதம் வரை கிட்டத்தட்ட 300 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறுகின்றனர். அவற்றுள் பெரும்பாலானவையில் அதிவேகமாக செல்வதே முதன்மை காரணமாக அமைந்துள்ளது. 

போக்குவரத்து காவல்துறையின் இந்த முயற்சியாகவே வெற்றிகரமாக அமைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.