எனக்கு கொரோனாவா? அதிர்ச்சியில் தூக்கில் தொங்கிய நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர்!

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரி சிங் தனக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அறிந்து தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுவது அப்பகுதியில் உள்ள இருட்டுக்கடை அல்வா கடை ஆகும். மிகவும் புகழ்வாய்ந்த இந்த கடையை பற்றி தெரியாதவர்களே இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் சமீபத்தில் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான ஹரிசிங் என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் என்பவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கு கொரோனா உள்ளது என்று அறிந்து அதிர்ச்சி அடைந்த இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் அதிர்ச்சியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.