அபசகுணம்! ஏண்டி வீட்டு வாசல்ல உட்கார்ந்து தலை சீவுற..? பக்கத்து வீட்டுக்காரர் கேட்ட கேள்வி! அவமானத்தில் இன்னொருவர் மனைவி எடுத்த பகீர் முடிவு!

தன்னை அபசகுனமாக அக்கம்பக்கத்தினர் கருதியதால் மனவேதனையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில் ஓடைத்தெரு எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணவேணி என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவரின் பெயர் சதீஷ். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்றுள்ளது.

இதனிடையே கிருஷ்ணவேணிக்கும், பக்கத்து வீட்டுக்காரரான சந்திரன் என்பவருக்கும் அடிக்கடி வாய் தகராறுகள் ஏற்படுவது வழக்கமாக இருந்தன. சந்திரனுக்கு சகுனம் பார்ப்பது அதீத நம்பிக்கை உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு அவர் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு கொண்டிருந்த போது, கிருஷ்ணவேணி தன்னுடைய வீட்டு திண்ணையில் தலை சீவி கொண்டிருந்தார். இதனை பார்த்து சந்திரன் அபசகுனமாக எண்ணினார். 

உடனடியாக அவர் கிருஷ்ணவேணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே மோதல் முற்றியது. அப்போது சந்திரன் ஒரு சில முறை கிருஷ்ணவேணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி தன் கணவர் சதீஷ்க்கு கால் செய்துள்ளார். சதீஷ் வீட்டிற்கு வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் கிருஷ்ணவேணி சந்திரனால் தனக்கு அவமானம் நேர்ந்து விட்டதாக கருதி மனமுடைந்துள்ளார். உடனடியாக தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கிருஷ்ணவேணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலைக்கு தூண்டியதற்காக சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.