ஒண்டி குடிசை! விவசாய கூலி! நீட் தேர்வை வென்றும் ஏழ்மையிடம் தோற்ற மாணவி!

நாகையில் தமிழ் வழியில் பள்ளி பயின்று நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவி வறுமையின்க் காரணமாக, தாயுடன் கூலி வேலைக்கு செல்ல அவலம்.


நாகை ,காமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சுபா, இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சிறு வயதில் இருந்து மருத்துவ கனவை சுமந்து வந்த மாணவி சுபா, தமிழ் வழியில் பள்ளி படிப்பை பெற்றவர், 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றவர், நடந்து முடிந்த நீட் தேர்விலும் சிறப்பான முறையில் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

எனினும் குடும்ப வறுமைக்காரணமாக மருத்துவ கனவைத் தொடர முடியாமல், மற்ற பாட பிரிவுகளிலும் சேர மனமில்லாமல் , கடைசியில் தாயுடன் கூலி வேலைக்கு செல்கிறார்.தனக்கான மருத்துவ கனவை தட்டி பறித்த அரியலூர் அனிதா மறைவையே இன்னமும் தாங்க இயலவில்லை . இதில் மற்றொரு பிள்ளை கனவை கசக்கி எறிந்து விட்டு கூலி வேலை செய்வது கண்கலங்க செய்கிறது.

இதற்கிடையில் தனக்கான கல்வி உதவிக்காக எதிர்ப்பார்த்து நம்பிக்கையுடன் மனம்.தளராமல் காத்திருக்கிறார் மாணவி சுபா.அரசின் பாராமுகம், அடிதட்டு மக்களின் கல்வியையும் வாழ்வாதாரத்தையும் கேள்விக் குறியாக்குகிறது.