அட்சயபாத்திரம் எனும் அரக்கன் தமிழகத்துக்குத் தேவையா..? நிறைய நிறைய சந்தேகங்கள்.

இந்தியாவிலேயே மதிய உணவுத் திட்டத்தை சிறப்பாக நடத்திவரும் மாநிலம் தமிழகம்.


அப்படியிருக்கும்போது, திடீரென அட்சயபாத்திரம் என்ற திட்டத்தின் மூலம் காலை உணவுத் திட்டத்தை தொடங்கியிருக்கிறது இஸ்கான் அமைப்பு. இதுகுறித்து தன்னுடைய சந்தேகங்களை பதிவிட்டுள்ளார் வடிவேல் சுப்பிரமணியம். 

தமிழக அரசு பள்ளிகளில் விதவிதமான காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வச்சதுனு சொன்னதும் ஆஹானு சந்தோசப்பட்டேன். ஆனா அந்த திட்டத்திற்கு ஆளுனர் 5கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்னு படிச்சதுமே அவங்க அவ்ளோ நல்லவங்க இல்லையே எதோ சம்திங் ராங்குனு மனசு சொல்லுச்சி

அதுபத்தி கொஞ்சம் தேடுனப்பதான் அந்த வலைப்பின்னலோட ஆழம் புரிஞ்சது. அந்த திட்டத்த செயல்படுத்தறது பெங்களூரை தலைமை இடமாக கொண்ட மிஷிரிசிளிழி என்ற அரே ராமா அரே கிருஷ்ணா எனும் அமைப்பு நடத்தும் அக்‌ஷய_பாத்ரா எனும் திட்டம். இது ஏற்கனவே பெங்களூர்ல ஆரம்பிச்சி இப்ப 12மாநிலங்களில் பரவி இருக்கு

குறிப்பாக பாசக ஆளும் மாநிலங்களில். இந்த திட்டத்தில் 12லட்சம் மாணவர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. இதற்கான நிதி உதவியை வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் திரட்டுகிறது. ஏற்கனவே இவர்கள் குழந்தைகளுக்கு இலவச சாப்பாடு போடறேனு வெளிநாடுகளில் இந்திய குழந்தைகளை காட்டி நிதி திரட்டி இந்தியர்கள் பிச்சை எடுக்கற நிலைல இருக்காங்கன்ற பிம்பம் உருவாகுதுனு ஒரு பெரிய பிரச்சினை வந்துச்சி அது வேற கணக்கு.

இப்ப உலகின் பெரிய சத்துணவு திட்டம்னு உருட்டறவங்க கவனத்திற்கு இஸ்கான் 2002ல சத்துணவு திட்டம் ஆரம்பிச்சது ஆனா தமிழகத்தில் 1923லயே மதிய உணவு திட்டம் ஆரம்பிச்சது ஐயா காமராசர் காலத்துல முழுமையாக செயல்பட்டது மறுபடி 1982ஜூலை1ம் தேதி சத்துணவு திட்டமா ஆரம்பிச்சப்ப 56லட்சம் குழந்தைகளுடன் ஆரம்பிச்சது இப்ப வாரத்துல ஐந்து நாளும் முட்டை தினமொரு சாப்பாடுன்ற அளவுல தமிழகத்துல 49,554 மையங்களில் 49லட்சம் + குழந்தைகளுடன் அருமையா செயல்படுது (என் மகனும் அங்கன்வாடிதான் போறான்)

ஏதோ இவங்க வந்துதான் தமிழகத்துல சத்துணவு திட்டம் ஆரம்பிக்கற மாதிரி ஆளுனர் மொதல்ல ரூ.2 கோடி மறுபடி ரூ.5 கோடி தந்து இந்த காலை உணவு திட்டத்த மதிய உணவுக்கும் விரிவு படுத்தனும்னு வேண்டுகோள் வைக்கறாரு. என்னடா நடக்குது இங்க...

அதுக்கென்னமோ சமையலறை கட்ட சென்னை கிரீம்ஸ் ரோடுல 17ஆயிரம் சதுர அடி (ரூ.300கோடி மதிப்பு) பெரம்பூர் பேரக்சுல 35ஆயிரம் சதுர அடி (ரூ.300கோடி மதிப்பு) இடமும் தந்து குடிநீர் மின்கட்டணம் அரசே ஏத்துக்குமாம். ஆளுனர் பணம் தருவாராம் அவங்க செய்து தருவாங்களாம் மத்தவங்களும் நன்கொடை அள்ளி தரனுமாம்.

இந்த பணத்த வச்சி அரசே செய்ய கூடாதா என்ன. நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வரேன் ஊதி ஊதி ரெண்டு பேருமே திங்கலாம்ன்ற கதையா இருக்கு. நிதி இல்லனு ஒரு பக்கம் 8ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவாங்களாம் இன்னொரு பக்கம் கோடிக்கணக்குல தனியார் நிறுவனத்துக்கு அள்ளி வீசுவாங்களாம்.

சரி போனா போவுது அவங்களே செய்யட்டும்னு விட்டா செய்யுற சோத்துல பூண்டு வெங்காயம் சேத்துக்க மாட்டாங்களாம். ஏன்டானா அது மூர்க்கத்தனத்தை வளக்குமாம். பூண்டு வெங்காயம் சேத்துக்காத கும்பல் யாருனு தெரியும்ல மார்வாடி ஜெயின் ஆக இவங்களை இயக்குறது யாருனு தெளிவாகுது.

கர்நாடகத்தில் குமாரசாமி அரசும் அதிகாரிகளும் வெங்காயம் பூண்டு கட்டாயம் சேர்க்கனும் இல்லனா 2018-19 ஒப்பந்தம் புதுப்பிக்க மாட்டோம்னு சொன்னப்ப மொத்தம் 71என்ஜிஓ ல எல்லாரும் ஏத்துகினாங்க ஆனா இஸ்கான் மட்டும் அப்டி சேர்க்க முடியாது உங்களால ஆனத பாத்துக்கனு சொன்னாங்க ஆனா குமாரசாமி ஆட்சியை இழந்தார். வெங்காயம் பூண்டு பிரச்சினை ஊத்தி மூடிட்டாங்க

வெங்காயம் பூண்டு தமஸ் வகை காய்கறி வகையாம். அது மூர்க்கத்தனத்த வளக்குமாம். கெட்ட உணர்ச்சிகளை தூண்டுமாம் அதனால் அத சேத்துக்காம சாத்வீக உணவு தந்து சாந்தமா குழந்தைகளை உருவாக்க போறாங்களாம்.

வெங்காயம் பூண்டே வேனாங்கறவன் நாளை மதிய உணவு திட்டத்த ஏத்துக்கறப்ப முட்டை சேர்த்து போடவா போறான். பல குழந்தைகள் பள்ளி கூடங்களில் மட்டுமே முட்டைன்ற ஒன்னு சாப்டறாங்க (அதிலும் பல நூறு கோடி ஊழல் அது வேற கதை) குறிப்பாக பாசக ஆளும் மாநிலங்களில் முட்டை வழங்கப்படுவதில்லை,

இந்த 1% கூட இல்லாத பார்ப்பனிய மார்வாடி ஜெயின் கும்பல்தான் சத்தமே இல்லாம மகாவீர் பிறந்த நாள் புத்த பூர்ணிமானு சொல்லி 90% மக்கள் சாப்பிடுற இறைச்சி கடைகளை மூட வச்சி தமிழக அரசு விடுமுறையும் தர வைக்குது. நம்ம தைப்பூசத்துக்கு ஆடி கிருத்திகைக்கும் பங்குனி உத்திரத்துக்கு அரசு விடுமுறை வேனும்னு முக்கினு இருக்கோம்

சரி இது ஒரு பக்கம்னா மதிய உணவு திட்டத்தை இஸ்கானுடைய "அட்சய_பாத்திரம் திட்டத்துக்கு தராங்கன்றப்ப மையங்களில் வேலை செய்யும் லட்சம்+ சத்துணவு டீச்சர், சமையலர்கள் கதி என்னாவது. அவர்களின் குடும்பங்கள் என்னாகறது.

ஒரு மணி நேரத்தில் ஒரு டன் காய்கறி வெட்டுற எந்திரங்களில் காய்கறிகள் எந்த அளவு தரமுடன் இருக்கும்னு யோசிச்சாலே போதும். தனியார்மயம் தேவைதான் அதுக்காக லட்சம் பேர் வயித்துல அடிச்சி பல கோடிகளை தாரைவார்த்து ஒரு மதவெறி கும்பலுடைய கொள்கைகளை எம் இளைய தலைமுறை மீது திணிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்துச்சி.

இதுல வருத்தம் என்னனா நல்ல திட்டங்களையே குறை சொல்ற எதிர்கட்சிகள் வரப் போகுற ஆபத்த அறியாம வாய்மூடி மௌனிகளாக கடந்து போறாங்க. எது எதுக்கோ போராடற ஆசிரிய சங்கங்களும் தம் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து தெரிந்தும் அமைதியா போறாங்க ஏன்னு தெர்ல. ஒரு வேளை நம்ம சொந்த குழந்தைகள் அரசு பள்ளில படிச்சி சத்துணவு சாப்டறதில்லைங்கற எண்ணமோ என்னவோ தெர்ல.

அட்சய பாத்திரம் தமிழக மக்களின் உரிமைகளுக்கு அடிக்கப்படும் இன்னொரு சாவுமணி தமிழகத்திற்கு தேவையே இல்லாத ஆணி. வருசம் 30ஆயிரம் கோடிக்கு சாராயம் விக்குற அரசு சில கோடிகளை ஒதுக்கனாலே அந்த சாராயம் வாங்கி குடிச்சி சாகுறவனோட வீட்டு குழந்தைகளுக்கு ஒரு வேளை காலை உணவு சேர்த்து போடலாமே. கவனத்தில் கொள்ளுமா அரசு என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.