40 குடும்பங்களை சேர்ந்த 250 முஸ்லீம்கள் இந்து மதத்திற்கு மாறினர்! அதற்கு அவர்கள் கூறிய காரணம்..!

ஹரியானா மாநிலத்தில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 250 முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாறி 80 வயதுடைய பெண்ணின் இறுதி சடங்குகளை இந்து வழக்கத்தின்படி செய்து முடித்துள்ளனர்.


ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பித்மிரா கிராமத்தைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர் இயற்கை எய்தினார். இவரின் இறுதி சடங்கை இந்து முறைப்படி செய்வதற்காக அந்த இடத்தில் வசித்து வரும் 40 முஸ்லிம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 250 உறுப்பினர்கள், கடந்த வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்தை தழுவியுள்ளனர். மேலும் இந்து முறைப்படி உயிரிழந்த அந்த பெண்ணின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்துள்ளனர்.

  முன்னதாக, ஆறு முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 35 உறுப்பினர்களும் கடந்த ஏப்ரல் 18 அன்று ஜிந்தின் டனோடா கலான் கிராமத்தில் இந்து மதத்தைத் தழுவினர். கிராமவாசியின் கூற்றுப்படி, பித்மதாவின் இந்த குடும்பங்கள் சுதந்திரத்திற்கு முன்பு தானோடா கலான் கிராமத்தில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய மதமாற்றம் செய்த சத்பீர், அவரது தாயார் பூலி தேவி கடந்த வெள்ளிக்கிழமை அன்று இயற்கை மரணம் எய்துள்ளார். சத்பீர் இன் தயார் கூலி தேவி இந்து மதத்தை பின்பற்றிய நபராக இருந்து வந்தார். அவரது இறுதி சடங்குகளை இந்து முறைப்படி செய்வதற்காகவே சத்பீர் உள்ளிட்ட 250 முஸ்லிம்கள் இந்த மதமாற்றம் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்பீர், டூம் சாதியைச் சேர்ந்தவர் , முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பின் காலத்தில் அவரது இந்து மூதாதையர்கள் முஸ்லீமை அழுத்தத்தில் தழுவி உள்ளனர். அவர்களின் முழு கிராமமும் இந்து பண்டிகைகளை கொண்டாடுகிறது, ஆனால் இறந்தவர்களின் இறுதி சடங்குகள் முஸ்லிம் மதத்தின்படி செய்யப்படுகின்றன. மதமாற்றம் செய்ய அவர்கள் மீது ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, எந்த கிராமவாசியும் யாருடனும் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

முஸ்லீம் நல அமைப்பின் மாநிலத் தலைவர் ஹர்பூல் கான் பட்டி தனோதா கலன் , சம்பவம் நடைபெற்ற கிராமத்தைப் பற்றி தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ஆனால் பித்மாரா கிராமம் குறித்து அதிக தகவல்கள் இல்லை என்று கூறினார். கிராமவாசிகள் அவர்கள் டூம் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் திட்டமிடப்பட்ட சாதி பிரிவின் நன்மைகளைப் பெறுவதற்காக நடைபெற்றுள்ளது என்று அவர் கூறினார். டூம் சாதி எஸ்சி பிரிவில் வைக்கப்பட்டுள்ளது, ஆனால் 1951 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் டூம் சாதியைச் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீடு பயனைப் பெற முடியாது, என்றார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.