ரூ.37 லட்சம் பரிசுத் தொகை! வேண்டாம் என முகத்தில் அடித்தது போல் கூறிய சிறுமி! நெகிழ வைக்கும் காரணம்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக குரலெழுப்பி வரும் சிறுமி க்ரெட்டா தன்பார்க்கிற்கு அறிவித்த சுற்றுச்சூழல் விருது மற்றும் 37 லட்சம் ரூபாய் பணத்தை அந்த சிறுமி நிராகரித்தார்.


சிறுமி க்ரெட்டா தன்பார்க் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். 16 வயதாகும் இந்த சிறுமி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் தன்னுடைய வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்தி வருகிறார். சிறுமி செய்த இந்த செயல் உலகெங்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறுமிக்கு ஆதரவாக உலகெங்கும் உள்ள மக்களால் குரல் எழுப்பப்பட்டது. 

இதனை கருத்தில் கொண்டு 87 நாடுகளை உள்ளடக்கிய நார்வே கவுன்சில் , இந்த சிறுமிக்கு சுற்றுச்சூழல் விருது வழங்க தானாக முன்வந்தது. இந்த சிறுமிக்கு சுற்றுச்சூழல் விருது மற்றும் 36 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது . இதனை அறிந்த க்ரெட்டா தன்பார்க், நார்வே கவுன்சிலருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் அறிவித்திருந்த விருது மற்றும் பரிசுத்தொகையை தான் பெறப்போவதில்லை என்று கூறி நிராகரித்துவிட்டார்.

எதற்காக இந்த விருதினை மறுத்து விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது , சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக விருது வழங்கும் செயலை நிறுத்தி விட்டு அதனை முறையாக பேணி காக்கும் செயலில் ஈடுபடுங்கள் என்று கூறி இருக்கிறாள் சிறுமி க்ரெட்டா தன்பார்க். சிறுமி கூறிய இந்த பதில் ஸ்வீடன் நாட்டு மக்களை மிகவும் நெகிழ வைத்திருக்கிறது.