டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார் .
டிஸ்கவரியின் மேன் வெர்சஸ் வைல்டில் மோடி! பியர் கிரில்ஸ்சுடன் காட்டுக்குள் வசித்து அசத்தல்!

டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது மேன் வெர்சஸ் வைல்ட் . இந்த நிகழ்ச்சியின் மூலம் மனிதர்கள் செல்ல முடியாத இடத்திற்கு சென்று அந்த இடத்தில் எட்வர்ட் மைக்கேல் பியர் கிரில்ஸ் பயணம் செய்து அங்குள்ள மரக்கட்டைகளை வைத்து கூடாரம் அமைத்து உயிரைப் பணயம் வைத்து உயிர் வாழ்ந்து காட்டுவார் .
இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, எட்வர்ட் மார்ட்டின் கிரில்ஸ் உடன் பங்கு பெற உள்ளார் . விலங்குகளை பாதுகாத்தல் மற்றும் விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்தல் ஆகிய செயல்களை மக்களிடையே பரப்புவதற்காக இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் .
இந்த நிகழ்ச்சியானது விலங்குகளை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்கில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை பற்றி மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ் ஒரு பதிவினை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .
அதில் உலகில் உள்ள 180 நாடுகளில் உள்ள மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மறுபக்கத்தை காண உள்ளனர் எனவும் ,பிரதமர் நரேந்திர மோடி விலங்குகளை பாதுகாத்தல் ,சுற்றுச்சூழல் பாதுகாத்தல் போன்றவற்றில் மக்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார் .
மேலும் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார் .