நாங்குநேரி தேர்தல்! அதிமுகவுக்கு யாதவர் சங்கம் திடீர் ஆதரவு! காரணம் இதுதானாம்!

அன்புடையீர் வணக்கம், 8/10/2019, மாலை 4.30 மணி அளவில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவரும் யாதவ மகா சபையின் தேசிய தலைவருமான டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்களை,


தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி மாண்புமிகு தளவாய் சுந்தரம் அவர்கள், தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ் உடைய சென்னை,தி நகர், இல்லத்தில் சந்தித்து நடைபெறவிருக்கும் விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தேர்தலில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் மற்றும் யாதவ மகாசபையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரினார்,

அப்போது தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறினார் "கோரிக்கைகளை" தாங்கள் எனக்கு கூறினாள் நான் மாண்புமிகு முதல்வரிடம் எடுத்துச்சென்று அவற்றை நிறைவேற்றுவேன்! என்று கூறினார்,

அதன்படி அவரிடம் 1) யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டயலில் சேர்க்க வேண்டும் 2) மாவீரன் அழகு முத்து கோனின் வீரத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அவருடைய வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் 3) TNPC -அமைப்பில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்

4) மதுரை யாதவர் கல்லூரி பிரச்சினையை சுமுகமாக தீர்த்து யாதவர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் 5) ஆவின் நிறுவனத்தில் யாதவர்க்கு இயக்குனர் பொறுப்பு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மாண்புமிகு தளவாய் சுந்தரம் அவர்களிடத்தில், தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ் வைத்தார்,

மாண்புமிகு தளவாய் சுந்தரம் அவர்களும், தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ் இல்லத்திலிருந்து படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கையின் விவரங்கள் எடுத்துரைத்தார், கனிவுடன் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட முதல்வர் உடனடியாக தலைவர் டாக்டர் தேவநாதன் அவர்களை அழைத்துக்கொண்டு முதல்வர் இல்லத்திற்கு வர சொன்னார், மாலை 6 மணி அளவில் தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ் உடன் முக்கிய நிர்வாகிகளும்,

டாக்டர் ஆவின் செல்வம் அவர்களும், மற்றும் பிரதாப் குமார் ஆகியோர் சென்றோம். அனைவரையும் அன்புடன் மாண்புமிகு தமிழக முதல்வர் வரவேற்று யாதவ சமுதாயத்தில் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்களிடம் வாக்குறுதி அளித்தார்,

மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைவர் தேவநாதன் யாதவ் அவர்களிடம் ஏறத்தாழ 45 நிமிடங்களுக்கு மேல் யாதவ சமுதாயத்தை பற்றியும் மேலும் சமுதாயத்துக்கு செய்யவேண்டிய செயல்கள் பற்றியும் பேசினார், முதல்வர் உடைய வாக்குறுதியை ஏற்று இடைத்தேர்தலில் யாதவர் சமுதாயம் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் அதிமுகவிற்கு ஆதரவளிப்போம் என தலைவர் தேவநாதன் யாதவ் மாண்புமிகு முதலமைச்சர் இடத்திலே மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்,

இந்நிகழ்வின் போது துணைத் தலைவர் குணசீலன்,சாலமன் மோகன்தாஸ்,மாநில இளைஞரணி செயலாளர் நெல்லை சுந்தர் தேர்தல் பிரிவு செயலாளர் நந்தகுமார் டாக்டர் ஆவின் செல்வகுமார் மற்றும் பிரதாப் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்