தாலி கட்டிய அடுத்த நிமிடம்! மணமகன் கன்னத்தில் ஓங்கி அறைந்த மணமகள்! நாமக்கல் திருமணத்தில் பகீர் சம்பவம்! அதிர்ச்சி காரணம்!

தாலி கட்டிய அடுத்த நிமிடமே அதை கழட்டி வீசிவிட்டு மணமகனின் கன்னத்தில் மணமகள் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவருக்கும் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் கோவிலில் நடைபெற்றது. சம்பிரதாயப்படி, மணமகன் தாலி கட்டிய பிறகு பெண்ணின் நெற்றியில் பொட்டு வைத்துள்ளார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த மணமகள் தாலியை கழட்டி மணமகனின் முகத்தில் விட்டெறிந்து பளாரென்று கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை தடுக்க முயற்சித்த அர்ச்சகரையும் அந்த மணப்பெண் தாக்கியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கோவில் அர்ச்சகர் இரு வீட்டாரையும் கோவிலில் இருந்து வெளியேறும் படி கூறிவிட்டு கோவிலை பூட்டி சென்றுள்ளார். மணமகனின் குடும்பத்தினர் கோபத்துடன் சேந்தமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பிறகு இரு வீட்டாரையும் அழைத்து பேசிய போலீசார், மணமகளுக்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

உடனடியாக, மணமகன் விஜிக்கு சொந்தக்காரப் பெண் ஒருவருடன் திருமணம் நடத்தப்பட்டது. அடுத்த திருமணம் நடந்து விட்டதால் மணமகன் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். 

இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் அன்று மதியம் வரை பெரும் பரபரப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது