கொட்டும் வசூல்..! படையெடுக்கும் பெண்கள்..! அஜித் பட சாதனையை முறியடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் வசூல் ஆனது தல அஜித் நடித்த நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் வசூலை விரைவில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையிடப்பட்டது . அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் குடும்பங்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது என்றே கூறலாம். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது எனவும் கூறப்படுகிறது. 

நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூபாய் 60 கோடியை வசூல் செய்துள்ளது . தீபாவளி ரிலீஸ் ஆக பிகில் திரைப்படம் திரையிட போகும் இந்நிலையில் வேறு எந்த புதிய திரைப்படம் திரையிடப்படாத போது சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மேலும் அதிக வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது தீபாவளிக்கு முன்பாக இந்த திரைப்படம் 75 கோடி வசூலை பெற்றுவிடும் என்று படக்குழுவினர் எதிர் பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் 75 கோடி வசூலை பெற்றுவிட்டால் , அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை பெற்ற ரூபாய் 73 கோடி வசூலை முறியடித்துவிடும் என்று நம்பப்படுகிறது.

மேற்கொண்டு பார்வை திரைப்படத்தின் வசூலை முறி அடிக்கிறதா நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .