திருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா! கண்ணீருடன் சிறைக்கு திரும்பிய நளினி! கலங்க வைத்த நிகழ்வு!

மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய 2 மாத கால பரோலில் இருந்து நளினி கடைசி வரை மகளை திருமண விஷயத்தில் ஒப்புக் கொள்ள வைக்க முடியாத காரணத்தினால் கண்கலங்கியபடி சிறைக்கு சென்றார்.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக நளினி வேலூர் சிறையில் உள்ளார். 30 வருடங்களாக சிறையில் உள்ள நளினி தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ய பரோல் கேட்டு விண்ணப்பித்தார். சிறை நிர்வாகம் பரோல் தராத நிலையில் உயர்நீதிமன்ற அனுமதியுடன் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

முதலில் 4 வாரங்களும் பிறகு 3 வாரங்களும் என சுமார் 2 மாதங்கள் வேலூரில் தங்கியிருந்து தனது மகள் ஹரித்ராவிற்கு திருமண ஏற்பாடுகளை கவனித்தார். மகளுக்கு தீவிரமாக வரன் தேடினார். ஒரு சில மாப்பிளைகள் பிடித்துப்போக அந்த புகைப்படங்களை லண்டனில் உள்ள ஹரித்ராவுக்கு நளினி அனுப்பி வைத்தார்.

ஆனால் தாய் அனுப்பிய எந்த மாப்பிளையையும் ஏற்க ஹரித்ரா மறுத்துவிட்டார். தந்தை முருகன் எவ்வளவோ சொல்லியும் திருமண ஏற்பாடுகளில் ஹரித்ரா ஆர்வம் காட்டவில்லை. மேலும் லண்டனில் இருந்து தமிழகம் வந்து தாய் நளினியை சந்திக்கவும் ஹரித்ரா மறுத்துவிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் நளினியின் பரோல் முடிந்தது.

இதனால் அவர் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு சென்றார். சிறைக்கு செல்ல போலீஸ் வேனில் ஏறிய போது நளினியின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அந்த கண்ணீர் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்கிற ஏக்கத்தினால் தான் என்பது அவர் சொல்லாமலேயே புரிந்தது.