தொலைத்துவிடுவேன்! கட்சி நிர்வாகிக்கு செல்போனில் பகிரங்க மிரட்டல்! வைரலாகும் சீமான் ஆடியோ!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு பேசும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிக்கு அக்கட்சியின் தலைவர் சீமான் மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.


நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் இந்திரா எனும் பெண்ணுக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைமை நிர்வாகிகளை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்திராவிற்கு அந்த நிர்வாகி கேட்கும் தொகுதியில் வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்த நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த நிர்வாகி இந்திரா காலத்தில் வேலை செய்பவர் என்றும் அவருக்கு வாய்ப்பளிக்காமல் வேறு யாருக்கேனும் வாய்ப்பளித்தால் சரியாக இருக்காது என்று சங்க நிர்வாகிகளிடம் தன்னுடைய வேதனையை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த சீமான் தனது செல்போனில் இருந்து அந்த நிர்வாகியை தொடர்பு கொள்கிறார். பின்னர் அந்த நிர்வாகியை உரிமையில் நீ வா போ டா வா டா விருப்பம் இல்லை என்றால் கட்சியில் ஏனடா இருக்கிறாய் என்று சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கிறார். மேலும் நான் சொல்வதைக் கேட்டுவிட்டு கட்சியில் இருந்தால் இருக்கலாம் இல்லை என்றால் கட்சியை விட்டு சென்றுவிடும் என்று மிரட்டும் தொணியில் சீமான் பேசுகிறார்.

அந்த ஆடியோவை நீங்களே கேளுங்கள்.