என்டி திவாரியின் மகனை கொன்ற வழக்கில், அவரது மருமகளே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் என்னை திருப்திபடுத்தவில்லை! அதனால் கொன்றேன்! அபூர்வாவின் திடுக் வாக்குமூலம்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்டி திவாரி. சமீபத்தில்தான், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மகன் ரோஹித் சேகர் திவாரி (40 வயது). இவர் ஓராண்டுக்கு முன்பாக, அபூர்வ சுக்லா திவாரி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த வாரம், டெல்லியில் உள்ள தனது வீட்டில் சுயநினைவின்றி ரோஹித் கிடந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் அறிவித்தனர். ரோஹித்துக்கு, மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரை யாரோ கொன்றுவிட்டதாக, குடும்பத்தினர் புகார் தெரிவிக்கவே அதன்பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ரோஹித்தின் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்ததால், யாரோ அவரை கொலை செய்ததாக, போலீசாரும் உறுதி செய்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில் ஒரு அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி, ரோஹித்தும், அவரது மனைவி அபூர்வ சுக்ல திவாரியும் கருத்து வேறுபாடு காரணமாக, ஒரே வீட்டில் தனிக்குடித்தனம் செய்து வந்துள்ளனர். கணவன் தன்னை எதிலும் திருப்திபடுத்துவதில்லை என்பதால் இந்த முடிவு எடுத்ததாகவும் அபூர்வா கூறியுள்ளார்.
இதில், அபூர்வ சுக்லா உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். எனினும், சொத்துக்கு ஆசைப்பட்டு ரோஹித்தை திருமணம் செய்துகொண்ட அவர், அதற்காகவே, கணவனை கொன்றும் விட்டதாக, என்டி திவாரியின் மனைவி உஜ்வாலா சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, அபூர்வ சுக்லாவை தீவிரமாக விசாரித்து வருவதாக, போலீசார் கூறியுள்ளனர்.