மோடியிடம் சர்வ அதிகாரம்! மாநிலங்களவையிலும் விரைவில் தனிப் பெரும்பான்மை! பீதியில் எதிர்கட்சிகள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அடுத்த ஆண்டு மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.


பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு கடந்த முறையும் தற்போது மக்களவையில் பெரும்பான்மை இருந்தாலும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் பல்வேறு முக்கிய மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் 123 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் பெரும்பான்மையைப் பெற்று விடலாம். ஆனால் பா.ஜக. கூட்டணிக்கு 102 உறுப்பினர்கள் ஆதர்வு உள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு 65 இடங்கள் உள்ளன இரு கூட்டணியிலும் இல்லாத மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 73 என்ற நிலையில் அரசுக்கு எதிரான உறுப்பினர்களின் எண்ணிக்கு 123ஐ தாண்டுவதால் மாநிலங்களவையில் மசோதாக்களை வெற்றி பெறச் செய்வது பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. 

இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த ஆண்டு 10 இடங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் 55 இடங்கள், ஜூன் மாதம் 5 இடங்கள், ஜூலையில் 1 இடம் நவம்பரில் 11 இடங்கள் உட்பட 72 இடங்களும் காலியாகின்றன. 

அவற்றில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட இடங்களில் காலியாகும் இடங்களில் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களை வெற்றி பெறச் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையில் பா.ஜ.க. தேவையான பெரும்பான்மையை பெற்று மசோதாக்களை எளிதில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.