மனிதர்களை போன்ற கண்கள்..! முனிவர்களை போன்ற தாடி..! கடவுளாக வணங்கப்படும் ஆட்டுக்குட்டி..! எங்கு தெரியுமா?

மனித கண்களுடன் ஆடு ஒன்று பிறந்த சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூர். இதன் புறநகர் பகுதியான நிமோடியாவில் சில நாட்களுக்கு முன்னர் ஆடு ஒன்று வினோதமான அங்கங்களை கொண்டதாக செய்திகள் வெளியாகின. இந்த ஆட்டின் உரிமையாளர் முகேஷ் என்பவராவார். இவர் சென்ற வாரத்தில் தன்னுடைய வீட்டில் ஒரு விகார ஆடு இருப்பதாக சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவில் ஆடு ஒன்று மிகவும் விகாரமாக இருந்தது. அந்த ஆடு தட்டையான முகத்தை கொண்டிருந்தது என்றும், மனிதர்களை போன்று கண் மற்றும் வாய் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.  இந்த ஆடு அப்பகுதியில் "கடவுள் அவதாரமாக" கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மருத்துவ ரீதியில் ஆலோசித்த போது சைக்கிளோபியா என்று பிறவி குறைபாட்டின் காரணமாக சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதனடிப்படையில்தான் நெற்றியில் கண் தோன்றியிருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கணிக்கின்றனர். 

இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.