லடாக்கில் பதற்றம்..! சீன மொழி எழுத்துகளுடன் மாமல்லபுரம் கடலில் கரை ஒதுங்கிய மர்ம டிரம்! திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சீன மொழியில் எழுதப்பட்டுள்ள ட்ரம் ஒன்று மாமல்லபுரம் கரையருகே ஒதுங்கிய சம்பவமானது மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு என்ற கடற்கரை அமைந்துள்ளது. நேற்று இந்த கடற்கரையில் சீல் செய்யப்பட்டிருந்த தகர ட்ரம் ஒன்று கரையோரமாக ஒதுங்கியுள்ளது‌. அப்பகுதியில் இருந்த மீனவர்கள் இந்த ட்ரமை உடைத்து பார்த்தபோது சுமார் 78 பொட்டலங்கள் உள்ளே இருந்துள்ளன. உடனடியாக மீனவர்கள் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொட்டலங்களில் "ரீஃபைன்ட் சைனீஸ் டீ" என்று சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பொட்டலங்கள் ஏதேனும் போதைப்பொருளை சார்ந்தவையா என்பதனை ஆய்வு செய்வதற்காக அனைத்து பொட்டலங்களையும் சென்னையில் இயங்கிவரும் அறிவியல் ஆய்வு பரிசோதனை மையத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். 

ஆய்வின் முடிவில் அவை அனைத்தும் "மெத்தாமாபிடைமின்" என்ற வகையை சேர்ந்த போதைப்பொருள் என்பதும், அவற்றின் மதிப்பானது 100 கோடி ரூபாயாகும் என்பதும் தெரியவந்துள்ளது. காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபடுவதற்கு முன்னர் மீனவர்கள் ட்ரமை உடைத்து பார்த்தால் அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது அவர்கள், ட்ரம்முக்குள் டீசல் அல்லது பெட்ரோல் இருக்கும் என்று எண்ணி உடைத்து பார்த்ததாக கூறியுள்ளனர்‌. இருப்பினும் இது போன்ற ஏதேனும் மர்ம பொருட்கள் கிடைத்தால் அவற்றை உடைக்காமல் தங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறையினர் மீனவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர். 

இந்த மர்ம ட்ரம் எவ்வாறு கரை ஒதுங்கியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.