அஜித்தின் முதல் காதலி ஷாலினி இல்லை..! யார் தெரியுமா? அவரே வெளியிட்ட தகவல்!

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் முதல் காதலி குறித்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சுமார் 20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் நடித்து வரும் முன்னணி கதாநாயகர்களில் மிக முக்கியமான இடத்தை பெற்றவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். தன்னுடைய வாழ்வில் தன்னம்பிக்கை மட்டும் கடின உழைப்பினால் மட்டுமே இவர் இவ்வளவு உயர்ந்துள்ளார் என்று கூறலாம். வாழ்க்கையின் தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டு தற்போது இந்த உயரத்தை எட்டியுள்ளார்.

இதனிடையே அஜித்குமார், தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமர்க்களம் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சியில் அஜித்குமார் ஷாலினி என் கையை கத்தியால் கிழிக்க நேரிட்டது.  இதனால் அஜித் மனமுடைந்தார். ஆனால் ஷாலினி அவரை தேற்றி இதெல்லாம் ஒன்னுமில்லை என்று கூறியுள்ளார். 

இந்த சம்பவத்தின் மூலம் அஜித் ஷாலினியின் மீது தன் காதலை வளர்த்துள்ளார். அதேபோன்று பெண்களின் பாதுகாப்பு பற்றியும், பெண்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவர்கள் என்பது குறித்தும் அஜித்குமார் அந்த காலத்தில் நிறைய பேசி வந்தார். இதன் மூலம் ஷாலினிக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

பின்னர் இருவருக்குள்ளும் காதல் இருந்ததால் அதனை எளிதாக வெளிப்படுத்தி கொண்டனர். அஜித் ஒரு பிராமணர் என்பதும், ஷாலினி ஒரு கிருத்துவ பெண் என்பதும் அவர்களுடைய வாழ்க்கையில் என்றும் ஒரு தடையாக இருந்ததில்லை. இருவரும் இன்றுவரை 19 ஆண்டுகளாகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

வெளியூர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அஜித்குமார் தன்னுடைய மனைவிக்கு கால் செய்து, அன்பாக பேசுவதை வழக்கமாக கொண்டவர். வாழ்க்கையில் சிரமங்களுக்கு மத்தியில் இவ்வளவு உயர்ந்ததற்கு ஷாலினி தான் காரணம் என்று அவர் நிறைய முறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தன்னுடைய முதல் காதலியை பைக் என்றும், 2-வது தான் ஷாலினி என்றும் அவர் அடிக்கடி கூறுவது குறிப்பிடத்தக்கது.