அநாதை சடலமாக கிடந்த இந்து பெண்..! தூக்கி சுமந்து தோள் கொடுத்த இஸ்லாமியர்கள்..! நெகிழ வைக்கும் சம்பவம்!

டெல்லியில் சடலமாக கிடந்த இந்து பெண்ணை முஸ்லிம் இளைஞர்கள் தங்களது தோளில் சுமந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று இந்தூரில் அவரது உடலை தகனம் செய்தனர்.


டெல்லியை சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை அன்று உடல்நலக் குறைவால் காலமானார். இந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த பெண் இறந்ததை அறிந்த அவரது உறவினர்களால் இறுதி சடங்கிற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. 

கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அவர்களது உறவினர்களால் இறுதி சடங்கில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. ஆகையால் யாரும் இல்லாமல் அனாதையாக அந்த பெண்ணின் உடல் இருந்துள்ளது. 

இதனை அறிந்த அருகில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் அந்த பெண்ணின் உடலை எவ்வாறு தகனம் செய்யலாம் என யோசித்து உள்ளனர் . எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாததால் அந்தப் பெண்ணின் இரண்டு மகன்களுடன் இணைந்து அருகில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் தங்களது தோளில் சுமந்து அந்த இந்து பெண்ணின் உடலை சுமந்து சென்று சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மத்திய பிரதேசம் இந்தூரில் அமைந்திருக்கும் தகன மயானத்தில் தகனம் செய்தனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இந்து முஸ்லிம் ஆகியோருக்கிடையே உள்ள சகோதரத்துவத்தை இது காட்டுவதாகவும் பேசப்பட்டது. மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத் முஸ்லிம் இளைஞர்களின் இந்த செயலை வெகுவாக பாராட்டினார். அது மட்டுமில்லாமல் அவர்கள் இந்த சமுதாயத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருந்து உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த சம்பவத்தை பற்றி அந்த முஸ்லிம் இளைஞர்களிடம் கேட்டபொழுது, இறந்த அந்த இந்து பெண்ணை எங்களுக்கு சிறுவயது முதலே நன்றாக தெரியும். மேலும் இது எங்களுடைய கடமை என்றும் அவர்கள் கூறியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.