உலகக்கோப்பை அணியிலிருந்து விஜய் சங்கர் நீக்கம்! உண்மையான காரணம் என்ன?

இந்திய உலக கோப்பை கிரிக்கெட் அணியில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் காயம் காரணமாக விலகவில்லை வேறு சில காரணங்களால் அணியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன .


பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் போது புவனேவ்ஸ்வர் குமார்  பந்துவீசும் போது அவரது காலில் காயம் ஏற்பட்டது . இதனால் ஆட்டத்தின் நடுவே அவர் போட்டியிலிருந்து விலகினார் .இதனால் விஜய் சங்கருக்கு பந்துவீச்சில் வாய்ப்பளிக்கப்பட்டு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் .

ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிகளில் விஜய் ஷங்கருக்கு பந்துவீச வாய்ப்பளிக்கப்படவில்லை . முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக  வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது பும்ரா  வீசிய பந்தில்  விஜய் ஷங்கர் காலில் காயம் ஏற்பட்டது .

இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய உலக கோப்பை போட்டியில் காயம் காரணமாக அணியில் இடம்பெறாத விஜய் சங்கர் நேற்று இந்திய அணி பந்து வீசும் பொழுது  இடைவேளையின்போது குளிர்பானங்களை மைதானத்திற்கு கொண்டு வந்தார் .

இந்த நிகழ்வை மையப்படுத்தி இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் ட்விட்டரில் ஒரு ட்வீட் போட்டு இருக்கிறார் . அதில் காயம் ஏற்பட்டுள்ள விஜய் ஷங்கர் ஏன் குளிர்பானங்களுடன் மைதானத்திற்கு ஓடி வர வேண்டும் .வேறு வீரர்கள் யாராவது அந்த வேலையே  செய்திருக்கலாமே என்றும் அவர் கூறியுள்ளார் .

இதனால் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விஜய் சங்கர் காயம் காரணமாக விலகி  உள்ளாரா அல்லது வேறு சில காரணங்களுக்காக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாரா என்ற குழப்பம் நிலவி வருகிறது .