பெற்ற மகன்.. கட்டிய கணவன் முன்னிலையில் ஓடும் ரயிலில் நெல்லை பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! அரக்கோணம் அதிர்ச்சி!

ஓடும் ரயிலிலேயே பெண்ணொருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமானது அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ராஜா. ராஜாவின் வயது 52. இவருடைய மனைவியின் பெயர் அருணா. சில வருடங்களுக்கு முன்னர் ராஜா அவருடைய குடும்பத்தினருடன் சென்று மும்பையில் வியாபாரத்தை தொடங்கினார்.  இத்தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகிவிட்டது. 

இந்நிலையில், குடும்பத்தினருடன் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மும்பை-நாகர்கோவில் ரயிலில் வந்துகொண்டிருந்தனர். வேலூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, அருணாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது

ரயிலில் பயணித்த பயணிகள் அவருக்கு முதலுதவி செய்தனர். ஆனால் சம்பவயிடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். அரக்கோணம் ரயில் நிலையம் வந்தவுடன் அருணாவின் உடலை வெளியே எடுத்து மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடனடியாக அவருடைய உடலை அரக்கோணம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அருணா தங்கள் கண்முன்னே இறந்தவுடன், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவமானது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.