ரயில் நிலைய நடைமேடை இடிந்து விழுந்து விபத்து! 5 பேர் பலியான பரிதாபம்!

மும்பையில் எப்போதும் பிஸியாக இருக்கும் ரயில் நிலையங்களில் ஒன்று சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்


இந்த ரயில் நிலையத்தில் இன்று இரவு திடீரென நடைமேடை ஒன்று இடிந்து விழுந்தது. அப்போது அந்த நடை மேடையில் நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 30 பேர் கீழே விழுந்தனர்.

அவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர் என்று அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ரயில்வே நடை மேடை இடிந்து விழுந்து விபத்து காரணமாக மும்பையில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டுதான் இதேபோல் ஒரு ரயில்வே நடைமேடையில் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ரயில்வே நடை மேடை இடிந்து விழுந்து அதில் மூன்று பேர் உயிரிழந்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.