கடைசில இறங்கி சென்னை அணிக்கு மரண பயம் காட்டிய ஹார்டிக் பாண்டியா & பொல்லார்ட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.  தொடக்க ஆட்டக்காரர்கள் டீ காக் மற்றும் ரோஹித் சர்மா மற்றும் யுவராஜ் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர்கள் நிலைத்து நின்று ஆடவிடாமல்  வந்த வேகத்தில் அவுட் செய்தனர். 

மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் மற்றும் க்ருனால் பாண்டியா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். சூரியகுமார் யாதவ் 59 ரன்களுக்கும், க்ருனால் பாண்டியா 42 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

பின்னர் களமிறங்கிய ஹர்டிக் பாண்டிய ஹார்டிக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து விளாசினர். கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணி 45 ரன்களை சேர்த்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது.