டி காக் அதிரடி! கிங்ஸ் XI பஞ்சாபிற்கு 177 ரன்கள் இலக்கு!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்துள்ளது


முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் டி காக் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 32 ரன்களுக்கு  ஆட்டமிழந்தார்.

டீ காக் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 60 ரன்களை எடுத்தார். இவர்களுக்கு பிறகு இறங்கிய மிடில் ஆர்டர்  பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினாலும், கடைசியில் இறங்கிய ஹார்டிக் பாண்டியா அதிரடியாக ஆடி 31 ரன்களை எடுத்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது. கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் ஷமி ,முருகன் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.