வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து! பிறகு இளைஞர் செய்த விபரீத செயல்!

பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.


மும்பை அருகே உள்ள போரிவிலி என்ற ஊரைச் சேர்ந்த அந்த இளைஞன், தனக்குத் தெரிந்த பெண் ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துள்ளான். பின்னர் கோராய் கடற்கரைக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற அவன், ஹோட்டலில் அறை எடுத்துள்ளான். அங்கு வைத்து அந்த பெண்ணுக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளான்.

அந்தப் பெண்ணும் குளிர்பானத்தை குடித்து விட்டு மயங்கி விடவே, அவன் தனது பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொண்டுள்ளான். மேலும் படுக்கையில் அந்தப் பெண் நிர்வாண கோலத்தில் கிடப்பதை புகைப்படமும் எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைத்து வந்துள்ளான்.

இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு விடுவதாகவும் அவன் மிரட்டியுள்ளான். பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சனிக்கிழமை அன்று அந்த இளைஞனை கைது செய்தனர்.

அவன் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.