ஓடும் காரில் நடிகையுடன் நடிகர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்! வீடியோ எடுத்து வெளியிட்ட போலீஸ்!

நள்ளிரவில் ஓடும் காரில் பிரபல நடிகரும், நடிகையும் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயலை மும்பை போலீசார் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.


   நள்ளிரவில் ஓடும் காரில் பிரபல நடிகரும், நடிகையும் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயலை மும்பை போலீசார் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

   நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். இதே போல் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் இந்தியில் பிரபல நடிகையாக உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

   படப்பிடிப்பு முடிந்த நிலையில் துல்கர் சல்மானும் – சோனம் கபூரும் ஒரே காரில் நள்ளிரவு தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது துல்கர் சல்மான் செய்து கொண்டிருந்த செயலை நடிகை சோனம் கபூர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். அந்த வீடியோ ட்விட்டரில் வெளியானதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

   நள்ளிரவு நேரத்தில் ஓடும் காரில் துல்கர் சல்மானும் – சோனம் கபூரும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்கிற கேள்வி எழுந்தது. துல்கர் சல்மானுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சோனம் கபூருக்கும் திருமணம் ஆகிவிட்டது.அப்படி இருக்கையில் ஏன் இருவரும் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்கிற கேள்வி எழுந்தது.

   இந்த நிலையில் கார் ஓட்டும் போது ஸ்டீயரிங்கை விட்டுவிட்டு துல்கர் சல்மான் தனது செல்போனை நோன்டிக் கொண்டிருந்ததே அந்த வீடியோவாகும். அந்த வீடியோவை விளையாட்டுத்தனமாக சோனம்கபூர் வெளியிட்டுள்ளார். அதே வீடியோவை மும்பை போலீசாரும் எடுத்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

   நள்ளிரவில் கார் ஓட்டும் போது துல்கர் சல்மானை போலை கைகளை விட்டுவிட்டு, ஸ்டீயரிங்கை பிடிக்காமல் செல்போனை நோன்டினால் விபத்து ஏற்படும் என்று எச்சரித்திருந்தனர். இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான நடிகை சோனம் கபூர், தங்கள் கார் ரிப்பேர் ஆகியிருந்ததாகவும், அதனை சரி செய்ய டோப் செய்து காரை வேறு ஒரு வாகனம் இழுத்துச் சென்று கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.



   இந்த உண்மையை தெரிந்து கொள்ளாமல் மும்பை போலீஸ், தங்கள் வீடியோவை வெளியிட்டு அவமானப்படுத்திவிட்டதாகவும் அவர் குற்றங்சாட்டியுள்ளார். இது போன்ற செயலில் ஈடுபடுவதற்கு முன்னர் போலீசார் தங்களிடம் என்ன நடந்து என்று கேட்டிருக்க வேண்டும் என்றும் சோனம்கபூர் கொந்தளித்துள்ளார். துல்கர் சல்மானும் கூட இதே கருத்தை தான் கூறியுள்ளார்.