உள்ளூர் மாணவிகள் முதல் வெளிநாட்டு மாணவிகள்..! ஒன் டைம் செட்டில்மென்ட்..! நாள் முழுக்க உல்லாசம்! தலைநகரை கலக்கும் ஹைடெக் விபச்சாரம்!

மும்பையில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்தியாவிலேயே பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அதிகம் உள்ள நகரம் மும்பை என்று சொல்லலாம். அதற்கு உதாரணம் ரெட்லைட் என்று சொன்னாலே போதும். மேலும் விளக்கங்கள் நமக்குத் தேவையில்லை. இந்நிலையில் அங்கு இணையதளங்களில் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அழகான பெண்களுடன் நாள் முழுவதும் உல்லாசமாக இருக்கலாம் என்ற விளம்பரங்கள் போடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தில் உள்ளதுபோல் அங்கே ஒரு கும்பல் கல்லூரி மாணவிகள் முக்கியமாக வெளிநாட்டில் இருந்து வந்து படிக்கும் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தொழிலை நடத்துவதில் முக்கிய பங்கு பாலிவுட் திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலர் என கூறப்படுகிறது.

இதையடுத்து வாடிக்கையாளர் போல அந்த நபர்களை போலீசார் தொடர்பு கொண்டனர். அந்தேரி கிழக்கிலுள்ள ஓட்டல் ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் . அப்போது அங்கிருந்த தரகர்களை தொடர்பு கொண்டபோது 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நாள் முழுவதும் வெளிநாட்டு பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறினர்.

இதையடுத்து திரைப்பட மேலாளர் மற்றும் இயக்குனரிடத்திலிருந்து 3 பெண்களை போலீசார் மீட்டனர் . அவர்கள் துர்க்மெனிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் என்பது தெரியவந்தது  மேலும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி கல்லூரி மாணவிகளை இந்த தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

வறுமையில் உள்ள பெண்களையும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களையும் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது .