தாத்தாவானார் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்! அம்பானி வீட்டில் விரைவில் குவா குவா!

மும்பை: முகேஷ் அம்பானியின் மகள் ஸ்லோகா மேத்தா அம்பானி கர்ப்பமாகியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


ஸ்லோகா மேத்தா அம்பானி, தனது நீண்ட கால நண்பரான ஆகாஷை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 29 வயதாகும் அவர், தற்போது பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதையொட்டி அம்பானி குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதில், அவரது தந்தை முகேஷ் அம்பானி, ''அடுத்த ஆண்டு இந்நேரம் நான் தாத்தா ஆகிருப்பேன், நீ அம்மா ஆகிருப்ப,'' என கூறியுள்ளார். இதை வைத்துப் பார்த்தால், ஸ்லோகா மேத்தா கர்ப்பம் தரித்துள்ளார் என்றும், வெளியில் சொல்லாமல் சற்று நாள் தள்ளி, பெரிய விழா நடத்தி அறிவிக்கப் போகிறார்கள் என்றும் அம்பானி குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்ற மார்ச் மாதம் உலகம் முழுவதும் இருந்து வந்த விஐபி.,க்கள் புடைசூழ, ஸ்லோகா மேத்தாவுக்கும், ஆகாஷ்க்கும் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.