பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து ரேஷ்மா செய்த செயல்! கட்டிப் பிடித்து கதறி அழுத முகேன்! அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 99 நாட்கள் முடிவடைய போகின்றன. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டனர் . தற்போது முகேன், லாஸ்லியா , சாண்டி , ஷெரின் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக உள்ளனர். 

இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்ட ரேஷ்மா, பாத்திமாபாபு , மோகன் வைத்தியா, மீராமிதுன் ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் வரும் வீடியோ ஒன்று ப்ரோமோவாக வெளியிடப்பட்டது. முதல் புரோமோ வில் வெளியேற்றப்பட்ட ரேஷ்மா முதலில் உள்ளே வந்த உடனே முகேனுக்காக , "என் மகனுக்கு நீங்கள் சாப்பாடு போடுவது இல்லையா" என்று அன்பாக மற்ற போட்டியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். 

அதற்கு அடுத்து வெளியிடப்பட்ட இரண்டாவது புரோமோவில் முகேனைப் பார்த்து ரேஷ்மா பல அன்பு கலந்த வார்த்தைகளை பேசினார். அதாவது போட்டியாளர்கள் அனைவரும் ஒரு அறைக்குள் அமர்ந்திருக்கின்றனர் . அங்கு ஒருவரை ஒருவர் பற்றி உரையாடல் நிகழ்த்தப்படுகிறது. அப்போது ரேஷ்மா, முகேனைப் பற்றின பல விஷயங்களை கூறுகிறார். இந்த உலகத்தில் நாம் அனைவரும் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றுதான் . அது உனக்காக வெளியில் நிறையவே காத்திருக்கிறது. நீ ஒன்றும் இல்லாதவன் கிடையாது என்று அறிவுரை கூறுகிறார். 

இதனைக்கேட்ட முகேனின் கண்கள் கலங்க தொடங்கியது. உடனே மோகன் ரேஷ்மாவை ஓடி வந்து கட்டி அணைத்து அழுத சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக காணப்பட்டது. பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற முகேன் சிறுவயது முதலே அன்புக்காக பலமுறை ஏங்கி உள்ளதாக அவரே பலமுறை கூறியது குறிப்பிடத்தக்கது.