எனக்கும் முகேனுக்கும் இடையே அது நடந்தது! என்னனு சொல்லியிருந்தா முகேனுக்கு பிக்பாஸ் டைட்டில் கிடைச்சிருக்காது! மீரா மிதுன் விபரீத வீடியோ!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதியுடன் கோலாகலமாக முடிவு பெற்றது.


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 போட்டியாளர்களில் மாடல் அழகியான மீராமிதுன் ஒருவராவார்.

நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே தன்னுடைய சக போட்டியாளர்களுடன் சச்சரவில் ஈடுபட்டு வந்தவர்தான் மீரா. இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் பல சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்ட வண்ணம் இருந்துவந்தார். 

அந்தவகையில் முகினை பற்றி மீரா வெளியிட்டதாக கூறி வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோ பதிவை மீரா தான் வெளியிடவில்லை என்று தற்போது கூறியுள்ளார். இதனை தற்போது ஒரு வீடியோ பதிவின் மூலம் கூறியுள்ளார் மீரா.

மேலும் அந்த வீடியோ பதிவில் , உண்மையில் எனக்கும் உங்களுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை நான் வெளியே கூறியிருந்தால் முகினுக்கு பிக்பாஸ் டைட்டிலே கிடைத்திருக்காது என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது மீரா பேசிய இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.