வேறொரு ஆணுடன் மிக நெருக்கம்..! தீயாய் பரவும் பிக்பாஸ் முகேன் காதலி புகைப்படம்! யார் தெரியுமா?

நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முகேன் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.


முகேன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற அபிராமி ஒருதலையாக முகேனை காதலித்து வந்தார். இதனை அறிந்த முகேன்,தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதை அவரிடம் கூறி, அபிராமியிடம் நண்பராகவே பழகி வந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிறகு முகேன் தனது சொந்த ஊரான மலேசியாவுக்கு சென்றார். மலேசியா திரும்பிய முகேனுக்கு ரசிகர்களிடம் இருந்தும் , நண்பர்களிடம் இருந்தும் , காதலி யாஸ்மின் இடமிருந்தும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் முகேன் காதலி யாஸ்மின் வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் யாஸ்மினுடன் இருக்கும் நபரின் பெயர் பொது புவீந்திரன் எனவும் தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தில் தனது காதலியுடன் இருக்கும் நபரை முகேனக்கு தெரியுமா , தெரியாதா என்ற பல்வேறு கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

.