அம்மா பசிக்குது..! கோமாவில் படுத்திருந்த தாயை எழுப்பிய குழந்தையின் ஒற்றை வார்த்தை! நெகிழ வைக்கும் சம்பவம்!

30 நாட்களாக கோமாவில் இருந்த தாய் தன் குழந்தையின் அழுகுரலை கேட்டு மீண்டு வந்து பால் கொடுத்த சம்பவமானது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.


அர்ஜென்டினா நாட்டில் கொர்டோபா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு லாரா ஃபெர்ரேரா என்ற 42 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்தமாதம் லாரா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவருடைய தலையில் தாக்கியுள்ளார். இதனால் அவர் படுத்த படுக்கையாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சுயநினைவை இழந்து விட்டதாகவும், இழப்பு ஏற்பட்டுவிடும் என்றும் மருத்துவர்கள் கூறினர். அதற்குள் உடற்பாகங்களை தானம் செய்யுமாறு மருத்துவர்கள் தன் கணவரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் அவரோ எப்படியும் என் மனைவி மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் மருத்துவர்களை தொடர்ந்து சிகிச்சை பார்க்குமாறு கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் லாராவின் குழந்தை மருத்துவமனைக்கு வந்தது. தன் தாயுடன் பாசமாக இருந்த குழந்தை, பசித்ததால் தாயிடம் தாய்ப்பால் கேட்டு அழுதுள்ளது.

30 நாட்களாக கோமாவில் இருந்த லாரா திடீரென்று மீண்டு வந்து குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியுள்ளார். இதனைக்கண்ட லாராவின் கணவர் மற்றும் மருத்துவர்கள் மெய்சிலிர்த்து போயினர். ஆனாலும் லாராவுக்கு இன்னமும் முழுவீச்சில் சுயநினைவு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

தற்போது லாரா மீண்டு விடுவார் என்ற நம்பிக்கை அவருடைய உறவினர்களிடம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது கேட்போர் உள்ளத்தை கரைய வைப்பது போன்று அமைந்துள்ளது.