பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சித்ரா தன்னுடைய இளம் வயதில் உயரத்தை பற்றி கூறியது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
என்னை கருவிலேயே கொன்றுவிட எங்க அம்மா மருந்தெல்லாம் சாப்டாங்க..! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட அதிர்ச்சி சீக்ரெட்!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில் தற்போது இளைய மருமகளாக வி ஜே சித்ரா நடித்துவருகிறார். சின்னத்திரை தொடரின் மூலம் அவர் நிறைய பிரபலமடைந்து இருக்கிறார். சமீபத்தில் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தபோது தன்னுடைய இளமை பருவத்தில் தான் சந்தித்த துயரங்களை பற்றி கூறினார்.
அதாவது சித்ராவுக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்கா உள்ளார். குழந்தை வேண்டாம் என்று கர்ப்பமடைந்த பிறகு யோசிக்க சித்ராவின் தாயார் அதற்காக மருந்துகளை சாப்பிட்டுள்ளார். ஆனாலும் சித்ராவின் தாயார் சாப்பிட்ட மருந்துகள் வேலை செய்யவில்லை. இந்நிலையில் சித்ரா குழந்தையாக பிறந்தார்.
அதன் பின்னர் அவருடைய பரம்பரையிலேயே டிகிரி பட்டம் பெற்ற முதலாவது ஆளாக சித்ரா உயர்ந்தார். முதுகலைப்பட்டம் வரைக்கும் சித்ரா பெற்றுள்ளார். மேலும் சித்ரா மீடியாவில் வருவதற்கு அவருடைய பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின் எதேச்சையாக அவருக்கு மக்கள் டிவியில் வாய்ப்பு கிடைத்தது.
தொடக்க காலத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்த சித்ரா, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் உதவியோடு சின்ன வீட்டிற்கு மாறினார். சிறுவயதில் தன்னை வளர்ப்பதற்காக தன் தாயார் பட்ட சிரமங்களை நீக்கி அவரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக ஒரு வீடு கட்ட தொடங்கினார். தனி வீடாக இருந்தால் அவர்கள் தனித்து வாழ வேண்டும் என்பதற்காக அருகில் 2 வீடுகளாக கட்டியுள்ளார். அவற்றை தற்போது வாடகைக்கு விட்டுள்ளார்.
அந்த வீடுகளில் இருந்து வரும் வாடகையில் தன்னுடைய தாயார் உட்காரவைத்து சித்ரா பராமரித்து வருகிறார். வாழ்வின் தொடக்க காலத்தில் மிகுந்த சிரமங்களை சந்தித்து, அதன்பின்னர் உயர்ந்துள்ள சித்ராவின் வாழ்க்கையைப் பார்த்து நிறைய பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.