அன்னை தெரசாவின் தபால் தலையை வெளியிட்டு கௌரவப்படுத்திய அமெரிக்கா!

தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்காகவே செலவிட்டவர் அன்பு தெய்வம் அன்னை தெரசா.


ஏழை எளிய மக்களுக்கும் நோய் பாதிப்பால்  அவதிப்பட்ட மக்களுக்கும் இவர் செய்த உதவிகளை கருத்தில் கொண்டு அமெரிக்க அரசாங்கம் அன்னை தெரேசா அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக தபால்தலையை வெளியிட்டுள்ளது. 

இந்த  தபால் தலையானது கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள தபால் சேவை துறையின் உயர் அதிகாரியின் முன் வெளியிடப்பட்டது. இந்தியர்களுக்காக இவர் செய்த தியாகத்தை பாராட்டும் வகையில் அமெரிக்க அரசாங்கம் செய்த மிகப்பெரிய செயல் என்று இதனைக் கூறலாம்.

இதுமட்டுமில்லாமல் அன்னை தெரேசா விற்கு அமெரிக்க அரசாங்கம் கௌரவ குடியுரிமை வழங்கி உள்ளது. இதனை அன்னை தெரசா இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்புதான் அந்த அரசாங்கம் அறிவித்திருந்தது . இதனை அடுத்து அன்னை தெரேசா 1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். 

தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு உதவியையும் அன்பையும் அளித்து  வந்த பெண் தேவதையான அன்னை தெரசா இக்கால பெண்மணிகளுக்கு  ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்பது நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயமாகும் .