திரைப்படமாகும் அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறு!

ஏழை எளிய மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.


இந்த திரைப்படம் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரை உலகிலும் படமாக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த  திரைப்படம் நோபல் பரிசு பெற்ற  அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் இந்திய மற்றும் சர்வதேச நடிகர்கள் நடிப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது . படம் 2020 இல் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீமா உபாத்யாய் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் இந்திய, சர்வதேச நடிகர்கள் நடிப்பார்கள் என படக்குழுவினர் கூறியுள்ளனர். அன்னை தெரேசாவின் இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை  பிரதீப் சர்மா, நிதின் மன்மோகன், கிரிஷ் ஜோஹர், பிராச்சி மன்மோகன் ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

தன் வாழ்நாள் முழுவதும் அன்னை தெரேசா செய்த பல தியாகங்களையும் பல உதவிகளையும் அனைத்து தரப்பு மக்களும் அறிந்துகொள்ள இந்த திரைப்படம் பெரிதும் உதவும் என படக்குழுவினர் கூறியுள்ளனர் மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இங்க திரைப்படமானது வரும் 2020 ஆம் ஆண்டு  திரையிடப்படும் என திரைப்பட குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது .