அன்பின் பிறப்பிடம் அன்னை தெரசாவின் வரலாறு!

அன்னை தெரேசா அன்பு மற்றும் கருணையின் பிறப்பிடமாய் வாழ்ந்தவர். ஆகஸ்ட் 26-ம் தேதி வந்தால் , அன்னை தெரேசாவின் 109 வது பிறந்தநாள்.


அன்பின் உருவான  அன்னை தெரேசா, கடந்த  1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பிறந்தார். அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் இந்தியக் குடியுரிமையும் பெற்றவராவார்.

இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.அன்னை தெரேசா தனது 18 வயதை எட்டியபோது கன்னிகாஸ்திரி ஆகவேண்டும்  வேண்டும் என  முடிவெடுத்து அதற்காக வீட்டை விட்டும் வெளியேறினார்.

பின்னர் சகோதரி தெரசா என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்ட இவர், 1923-ல் 'சோடாலிட்டி ஆஃப் சில்ரன் ஆஃப் மேரி' என்ற சமூக சேவை அமைப்பில் இணைந்தார்.

சிறிது காலம் ஏழைகளுக்கு கல்வியறிவு புகட்டுவதற்காக பள்ளியில் இணைந்து ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவியை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் செவிலிய பயிற்சியை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

பின்னர் 1950-ஆம் ஆண்டு பிறர் அன்பின் பணியாளர் என ஒரு கத்தோலிக்க சபையை நிறுவி 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்றோருக்கும் நோய்வாய்ப்பட்டோருக்கும் மிகப்பெரிய உதவிகளை  செய்து வந்தார்.

தொழு நோயாளிகளுக்கு ஆதரவு தருவதற்காக 'நிர்மல் இருதய' என்னும் இல்லத்தை தொடங்கி அங்கு  ஆதரவற்ற அனாதையாக இருந்த தொழு நோயாளிகளை அழைத்து வந்து இலவசமாக மருத்துவ வசதியை செய்து தந்தார்.

இது மட்டுமில்லாமல் அன்பின் பணியாளர் என்னும் அமைப்பின் மூலமாக தொழுநோய், காச நோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோயால் அவதிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பலரது வாழ்க்கையை காப்பாற்றி கொடுத்தவர் கருணை கடல் அன்னை தெரேசா. 

மேலும் ஆதரவில்லாமல் கிடந்த  குழந்தைகளையும் தன்னுடைய இல்லத்தின் மூலமாக அவர்களுக்கு நல்ல உணவையும் உடையையும் கல்வியையும் தந்து அவர்களது வாழ்வையே மாற்றி அமைத்தார்.

மற்றவர்களுக்காகவே தன்னுடைய கடைசி உயிர்மூச்சு வரை வாழ்ந்து வந்த அன்பின் பிறப்பிடமான மதரஸா அன்னை தெரேசா கடந்த 1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் இவ்வுலகத்தை விட்டு பிரிந்து சென்றார்.