9 வயது மகளுக்கு திருமண ஏற்பாடு! ரூ.30 ஆயிரம் பணத்திற்கு பெற்ற தாயே செய்த பகீர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் , அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது இளைஞர் இடத்தில் ரூபாய்.30000 பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக தன்னுடைய 9 வயது மகளை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆறாங்காபாத் பகுதியில் ஆஷா மதி கோலப் எனும் பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 9 வயதில் மகள் இருக்கிறார். அதே பகுதியில் வசித்து வரும் ஊர்மிளா யாதவ் மற்றும் ஆஷாமதி கோலப் ஆகிய இருவரும் தோழிகளாக பழகி வந்தனர்.  ஊர்மிலா யாதவுக்கு திருமணமாகி சந்தோஷ் யாதவ் என்ற 20 வயது மகன் ஒருவர் இருக்கிறார். 

இன்னிலையில் 20 வயதான சந்தோஷ் யாதவ் உக்கும் ஆஷா மதியின் 9 வயது மகளுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஆஷா மதி மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக ஆசைப்பட்டு சின்னஞ்சிறு சிறுமியை 20 வயது ஆணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருமணம் செய்ய தாயார் ஆஷாமதி கோலப் முடிவு செய்திருக்கிறார்.

இLந்த சம்பவத்தை பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருக்கின்றனர். திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஃபுலங்கர் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் இந்த திருமணம் ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஊர்மிளா யாதவ், ஆஷா மதி கோலப், சந்தோஷ் யாதவ், மங்கள் பாய், அஜின் மூய்தீன் கனி, ஜாபர் இஸ்மாயில் ஆகியோரை போலீசார் கைது செய்து குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் இருக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.