பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த பகீர் செயல்..! சென்னை மடிப்பாக்கத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

சென்னை மடிபாக்கத்தில் உள்ள வீட்டில் கணவன், மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சோகத்தில் பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்கொலை என காவல் துறை சார்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவக்குமார் மற்றும் ஆனந்தி தம்பதினர் இருவருக்கும் திருமணமாகி ஒன்றாக வசித்து வந்த நிலையில், இருவருக்கும் ஒரு மகன் இருந்துள்ளான். ட்ரைவராக வேலை பார்க்கும் சிவக்குமார்க்கும் தனியார் தொழில் நுட்பத்தில் வேலை பார்க்கும் ஆனந்திக்கு அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக சண்டை வருவது வழக்கம். இந்நிலையில், ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக மனைவி கணவனை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். 

இந்த பிரிவு ஒரு புறம், கொரோனா ஒருபுறம் இருக்க தனிமையின் காரணமாக மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்கில் தொங்கி உள்ளார். இந்த சம்பவம் மடிபாக்கம் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும், மனைவி மற்றும் குழந்தை காண சென்ற கணவன் இவர்கள் இப்படி பிணமாக கிடைப்பதை பார்த்தும் அதிர்ந்து போனார். பின்னர் தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில், . கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்கொலைக்கு காரணம் என காவல் துறை சார்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.