6 குழந்தைகள் பிறந்த பிறகும்! மனைவியை உயிரோடு எரித்து கணவன் அரங்கேற்றிய பயங்கரம்! வாலாஜா பரபரப்பு!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை உயிரோடு எரித்த சம்பவமானது வாலாஜாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை எனும் இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு உட்பட்ட தேவதான தெருவை சேர்ந்தவர் முத்து. முத்துவின் வயது 60. இவருடைய மனைவியின் பெயர் ஈஸ்வரி. ஈஸ்வரியின் வயது 47. இத்தம்பதியினருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

சமீபகாலமாக ஈஸ்வரியின் நடத்தை மீது முத்துவுக்கு அடிக்கடி சந்தேகங்கள் ஏற்பட்டு வந்தன. இதனால் இருவருக்குள்ளும் எப்போதும் தகராறுகள் ஏற்படும் வண்ணம் இருந்தன. இதேபோன்று 24-ஆம் தேதியன்று இருவருக்கும் இடையே பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதங்கள் முற்றி கைகலப்பு வரை சென்றது. ஆத்திரம் தலைக்கேறியதால் முத்து அவருடைய இரு சக்கர வாகனத்திலிருந்த பெட்ரோலை தன் மனைவியான ஈஸ்வரியின் மீது ஊற்றி எரித்துள்ளார்.

இவர் மீதும் தீ பரவியது. இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வாலாஜா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே துரதிஸ்டவசமாக நேற்று காலை ஈஸ்வரி உயிரிழந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்னர் "கணவர் முத்து தான் என்னுடைய இறப்புக்கு காரணம்" என்று மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதனால் காவல்துறையினர் கொலை முயற்சி என்று பதிவு செய்திருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

இந்த சம்பவமானது வாலாஜாபேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.