11 வயது மகனை செய்யக்கூடாததை செய்துவிட்டு தப்பி ஓடிய பெற்ற தாய்..! நெஞ்சை உலுக்கி எடுக்கும் சம்பவம்!

பெற்ற மகனை கொலை செய்துவிட்டு காவல்துறையினரிடம் தாயொருவர் மகன் காணாமல் போய் விட்டதாக நாடகமாடி உள்ள சம்பவமானது பிரேசில் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரேசிலின் "ரியோ கிரேண்ட் டோ ஸல்" என்ற மாகாணம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட "பிளானால்டோ" என்ற நகரத்தை சேர்ந்த 11 வயது இளைஞனின் பெயர் ரஃபேல். இவருடைய தாயாரின் பெயர் அலெக்ஸாண்ட்ரா. 10 நாட்களுக்கு முன்னர் தன்னுடைய மகனை காணவில்லை என்று அலெக்ஸாண்ட்ரா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவமானது 16-ஆம் தேதியன்று அரங்கேறியுள்ளது. தான் தூங்கி எழுந்தபோது ரஃபேலை காணவில்லை என்று அலெக்ஸாண்ட்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

காவல்துறையினரும் முதற்கட்டத்தில் மகன் வீட்டை விட்டு ஓடியிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை நடத்தினர். ஆனால் தடவியல் நிபுணர்கள் வீட்டை சோதனை செய்த போது வீட்டில் ரத்தக்கறையை கண்டுபிடித்துள்ளனர். அதேபோன்று ரஃபேலின் வளர்ப்புத் தந்தையும் காரிலும் ரத்தக்கறையை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அதன் பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள், ரஃபேல் சடலத்தை அலெக்ஸாண்ட்ரா தம்பதியினரின் பழைய வீட்டில் கிடப்பதாக கண்டறிந்தனர். சடலத்தை மீட்டு எடுத்து காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அலெக்ஸாண்ட்ராவிடம் தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். கிடுக்குப்பிடி விசாரணை அமைப்பு ஈடுகொடுக்க இயலாமல் அலெக்ஸாண்ட்ரா செய்த தவறை ஒப்புக்கொண்டார். அதாவது உணர்ச்சிவசப்பட்ட பிரச்சனைகளால் ரஃபேல் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட மருந்தின் அளவு அதிகரித்ததால் இறந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார். பின்னர் அவருடைய உடலை தாள் ஒன்றில் சுற்றி பழைய வீட்டில் கொண்டு போட்டுவிட்டதாகும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டால் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது அந்நாட்டு உள்ளுர் ஊடகங்களில் வைரலாகி வருகிறது.